Wednesday 13 February 2013

பிரித்தானியாவில் இருந்து பெப் . 28ஆம் திகதி பயணமாகிறது அகதிகள் விமானம்; கையொப்பமிட செல்லும் ஈழத்தமிழர்கள் கைது


பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் 28ஆம் திகதி புகலிடம் கோரிய ஈழதமிழர்களை திருப்பி அனுப்ப விமானம் தயார் நிலையில் உள்ளது . இதனால், கையொப்பமிட செல்லும் பல தமிழர்கள் கைது செய்யபடுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எனவே, கையொப்பமிட செல்பவர்கள் அவதானமாக இருக்கவும். 

இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து தாம் நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கையில் சித்திரதைகளுக்கும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக 15 இலங்கையர்கள் முறையிட்டுள்ளனர் இந்த தகவலை தெ கார்டியன் செய்திதாள் வெளியிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 15 இலங்கையர்களும் குழு பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக சட்டத்தரணி ஒருவரை கோடிட்டு கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை லண்டனில் தற்போது வசிக்கும் 40 வயதான பெண் ஒருவர், தம்மை இலங்கையின் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிடம் தெரிவித்துள்ளார். காணாமல் போன தமது இரண்டு மகன்மாரின் விபரங்களை கோரியபோதே தமக்கு இந்த கதி நேர்ந்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே தாம் லண்டனுக்கு தப்பிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நாடு கடத்தப்படும் இலங்கையர்களின் விடயம் தொடர்பில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு உரிய கரிசனையை காட்ட வேண்டும் என்று தெ கார்டியன் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment