Tuesday 26 February 2013

சிங்களவர்களை பட்டினி போட்டு திருப்பி அனுப்பிய ஹோட்டல் ஊழியர்கள்

விடுதலை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்ப‌ி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌னி‌ன் மக‌ன் இல‌ங்கை ராணுவ‌த்‌தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வை பா‌ர்‌த்து கடு‌ம் கொ‌தி‌ப்‌பி‌ல் இரு‌க்கு‌ம் த‌மி‌ழ்நா‌ட்டு ம‌க்க‌ள், வேளாங்கண்ணிக்கு வந்த 75 சிங்கள‌ர்களு‌க்கு ஓ‌ட்ட‌லி‌ல் சா‌ப்பாடு மறு‌க்க‌ப்ப‌ட்டதோடு அவ‌ர்க‌ள் ‌விர‌ட்டியடி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கை ராணுவத்தினரால், அப்பாவி தமிழர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படும் காட்சிகள் வெளியாகி வருவதால், தமிழ்நாட்டில் சிங்களர்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனை, பணய கைதியாக பிடித்து வைத்து அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம், தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் ஆன்மிக பயணமாக தமிழகம் வந்த அந்நாட்டு எம்.பி. கர்ணரத்தன ஜெயசூர்யாவை தமிழின ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நாகை, தஞ்சை, திருச்சியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இலங்கையில் இருந்து சிங்களர்கள் 75 பேர் தனியார் விமானம் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக பயணமாக திருச்சி விமானநிலையத்திற்கு வந்தனர். அவர்கள் 3ஆ‌ம் தேதி வரை வேளாங்கண்ணியில் தங்கி இருந்து விட்டு, சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்த தகவல் வெளியே தெரிந்ததால், தமிழீழ ஆதரவு அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என கருதி, அவர்களை போலீசார் பத்திரமாக திருச்சியில் இருந்து 2 பஸ்களில் வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்கள் வந்த தகவல் பரவியதால், இலங்கை பயணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரச்சனை ஏற்படாமல் இருக்க, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே இலங்கை பயணிகள் வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை வேளாங்கண்ணி செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் மீண்டும் திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல போலீசார் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சிங்களர்கள் வந்த 2 பஸ்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே வந்து கொண்டிருந்தன.

அங்கு சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக அவர்கள் பஸ்களில் இருந்து இறங்கினர். அவர்கள் சிங்களர்கள் என்று தெரிந்து கொண்ட ஓட்டல் ஊழியர்கள், அவர்களுக்கு சாப்பாடு போட மறுத்து, திரும்பிப்போகும்படி கூறினர். அப்போது ஓட்டல் ஊழியர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ஓட்டல் ஊழியர்களை சமாதானப்படுத்தி, இலங்கை பயணிகளை பஸ்சில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment