Saturday 16 February 2013

தீபம் தொலைக்காட்சி நோர்வே புலிகளுக்கு விற்பனை


லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.  நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர்.

தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.

தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.

ஓன்று பாசிச புலிகள் என்ற வார்த்தையை அவர் இனிமேல் தீபம் தொலைக்காட்சியில் பாவிக்க முடியாது. பாவித்தால் பாவம் அவர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்.

இரண்டாவது விடயம் வருடாவருடம் ஆட்டதுவசம் செய்வது போல யாழ்ப்பாண முஸ்லீம்களை 24 மணிநேரத்தில் உடுத்த உடுப்போடு பாசிச புலிகள் வெளியேற்றிய ஆண்டு தினம் இன்று என ஆட்டதுவசம் செய்ய முடியாது. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அது தவறுதான். ஆனால் அனாஸ் போன்றவர்கள் யாழ். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை பேசும் சமகாலத்தில் கிழக்கில் 40க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழர்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப்பட்ட சம்பங்களையும் நினைவு கூர்ந்து கண்டிப்பாராக இருந்தால் அவரை நடுநிலையாளராக ஏற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவது விடயம் இனிமேல் மகிந்த ராசபக்சவின் கைக்கூலிகளை அழைத்து அவர்களின் பிரசாரத்திற்கு களம் அமைத்து கொடுக்க முடியாது.
அண்மையில் கூட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழக்கள் இருவரை அழைத்து யாழ்ப்பாணத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. இராணுவம் தமிழ் மக்களுடன் அன்பாக நடந்து கொள்கிறது. இந்த தமிழ் கூட்டமைப்பினரும் வெளிநாட்டில் உள்ள பாசிச புலிகளும் தான் பொய்யான பிரசாரத்தை செய்கிறார்கள் என சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினர்கள் இருவர் அனாசிற்கு செவ்வி வழங்கியிருந்தனர். அப்படி பட்டவர்களை வைத்து இனிமேல் அனாஸால் பிரசாரம் செய்ய முடியாது. இப்படி பட்ட பல கூட்டாளிகளை இனிமேல் அனாஸ் மறந்து விட வேண்டியதுதான்.

அடுத்தது தீபம் தொலைக்காட்சி அடிக்கடி களம் அமைத்துக்கொடுக்கும் இரு பெண்கள், பாசிச புலிகள் பாசிச புலிகள் என்ற வாய்ப்பாட்டை தவிர வேறு எதுவும் தெரியாத லண்டனில் இருக்கும் அம்மணிகள் இருவர்.  (லண்டன் புரட்சி திலகங்கள் இராஜேஸ்வரி அக்கா, நிர்மலா அக்கா) அவர்களுக்கும் இனி லண்டனில் தொலைக்காட்சிகளில் களம் இல்லை.

எற்கனவே  ஊத்தைகளுக்கு தீபம் தொலைக்காட்சிதான் களம் அமைத்து கொடுத்து கொண்டிருந்தது. லண்டனிலிருந்து இயங்கும் மற்றொரு தொலைக்காட்சியான ஜி.ரி.வி இப்படி பட்ட ஊத்தைகளை வாசல்படிக்கே எடுப்பதில்லை. தீபம் தொலைக்காட்சிதான் அசிங்கமான ஊத்தைகளிற்கு களம் அமைத்து கொடுத்து கொண்டிருந்தது. அதற்கு பெரிதும் உதவி வந்தவர் அனஸ்தான். இனிமேல் அவர்களின் தொடர்பை எல்லாம் துண்டித்து கொள்ள வேண்டியதுதான்.

தீபம் தொலைக்காட்சி கொழும்பில் வைத்திருந்த அலுவலகத்தை மூடியுள்ளது. விடுதலைப்புலிகள் வாங்கியுள்ளதால் இனிமேல் வெளிப்படையாக அலுவலகத்தை வைத்து இயங்க முடியாது. மறைமுறைமாகத்தான் இயங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் முழுக்க முழுக்க புலி எதிர்ப்பாளர்களே வேலை செய்தனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஆனாலும் தீபத்தை வாங்கியவர்களின் இன்னொரு முகமும் இருக்கிறது. லண்டனில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பதால் இது விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி என காட்ட முடியாது. இதனால் அனாஸ் போன்றவர்களை முன்னுக்கு வைத்துக்கொண்டு புலியின் பக்கமும் இல்லை, பூனையின் பக்கமும் இல்லை, நாங்கள் நடுநிலையாளர்கள் என்று பம்மாத்துக்காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நன்றி: தினக்கதிர்
 

No comments:

Post a Comment