Friday 15 February 2013

குதிரை இறைச்சி வித்தவங்களை கண்டுபிடிச்சிட்டாங்க....?


ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறு குடலையும் பெருங்குடலையும் இப்போது முறுக்கி எடுப்பது குதிரை இறைச்சி விவகாரம்தான்.

மாட்டிறைச்சி என்று லேபலில் அடித்து, குதிரை இறைச்சியை உணவாக்கி விற்றவர்களில் மூவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் குதிரை இறைச்சி விற்பனை செய்த கடைத்தொகுதிகள், ஏற்றுமதி விபரங்கள் அடங்கிய படிவங்களுடன் அகப்பட்டுள்ளனர்.

64, 63, 42 வயதுடைய இந்த மூவரும் இவர்களுடன் சம்மந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களும் குற்றத்தை மறுத்துள்ளன.

குற்றவாளியாகக் காணப்பட்டால் மரணதண்டனையை விட மோசமான குற்றச் செயலாக இது வந்துமுடியும் என்பது தெரிந்ததே.

மறுபுறம் பிரான்சிய போலீசார் ஸ்பாங்ஹீரோ என்ற பிரான்சிய நிறுவனம் குதிரை இறைச்சி மோசடியில் சம்மந்தப்பட்டிருப்பதை கண்டு பிடித்துள்ளது.
மேற்படி தகவலை பிரான்சிய அமைச்சர் பினோய்ற் காமன் தெரிவித்துள்ளார்,

மாட்டிறைச்சி போலத்தானே குதிரையும் அதனால் என்ன பெரிய பாதிப்பு என்று கருதிவிடலாகாது, ஐரோப்பிய குதிரைகளின் கதை வேறுபட்டதாகும்.
நேற்று பிரிட்டன் சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய குதிரைகளுக்கு ஏற்றப்படும் விசேட மருந்தின் பெயர் வெளியாகியிருந்தது.
இந்த மருந்து குதிரைகளுக்கு மட்டும் பொருந்தும், மனிதருக்கு ஒவ்வாது, இரத்தத்தில் பல்வேறு சுகயீனங்களையும் ஏற்படுத்தும் இரசாயனங்கள் கலந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஆகவே ஐரோப்பிய குதிரைகள் மனிதனுடைய உணவுக்கு சேர்க்கப்படக்கூடாத இறைச்சியாக இருக்கிறது.

மேலும் குதிரை இறைச்சியல்ல இங்கு விவகாரம் இதுபோல உணவின்வழி பல ஆபத்துக்களை செய்ய எதிரிகள் திட்டமிட்டால் என்ன செய்வது, இதுதான் கெடிக்கலக்கம்.

விவகாரம் தை 16 அம்பலமான பின் மூன்று வார இடைவெளியில் டென்மார்க் டி.என்.ஏ பரிசோதனை செய்ய இருப்பதாகக் கூறியிருப்பது எவ்வளவு பெரிய மடைத்தனம் என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே.

அனைத்து உணவுப் பொருட்களும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டிய நிலையை இது ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குதிரை இறைச்சி விவகாரம் மாபெரும் சர்வதேச மோசடியாக கணக்கிடப்படுகிறது, ஸ்கொட்லான்ட்யாட், இன்ரபோல் இரண்டும் களமிறங்குமளவுக்கு பாரதூரமான விடயமாக நோக்கப்படுகிறது.
இதுபோன்ற ஒரு நாசச் செயல் பயங்கரவாதிகளின் கைகளுக்கு போய்விட்டால் ஐரோப்பாவையே அவர்கள் சுடுகாடாக்கிவிடலாம் என்ற மர்ம அச்சம் இருப்பதை இதுவரை ஊடகங்கள் பேச ஆரம்பிக்கவில்லை.

சிந்தித்தால் சிரிப்பு வரும்.. மனம் நொந்தால் அழுகை வரும் என்ற நிலையில் ஐரோப்பாவின் உணவுப்பிரிவு கதிகலங்கி நிற்கிறது.

இறைச்சி விற்பனையில் ஏற்படும் பாதிப்பு, றெஸ்ரூரன்ற்களில் சாப்பிட வருவோர் அடையும் அச்சம் என்று ஏகப்பட்ட விவகாரம் இதில் இருக்கிறது.

No comments:

Post a Comment