Friday 22 February 2013

படகில் அம்மா பயணித்ததாக பாலச்சந்திரன் கூறினாரா?


 விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலைசெய்த நபர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவே என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மே 19ம் திகதி காலை 7.30 மணியளவில் 53ம் படைப் பிரிவில் வந்து சரணடைந்துள்ளார் பாலச்சந்திரன். இது இவ்வாறு இருக்கையில், 18ம் திகதி இரவு(முதல் நாள்) 2 படகுகள் நந்திக்கடலூடாக புறப்பட்டதாகவும், இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பவே இப் படகில், சிலர் பயணித்ததாக பாலச்சந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிடம் தெரிவித்ததாக அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. 

ஒரு படகில் தனது அம்மா மதிவதனி, புறப்பட்டுச் சென்றதாகவும், இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இக் கூற்றில் உண்மை இருக்கலாம். ஏன் எனில் கேணல் ரமேஷ் அவர்கள் 18ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தபோது அவரை முதலில் விசாரித்த இராணுவத்தினர், தேசிய தலைவரின் மகன் மற்றும் மனைவி எங்கே என்று தான் கேட்கிறார்கள். மற்றும் இதற்கு அடுத்த நாள் தான் பாலச்சந்திரன் இராணுவத்திடம் சரணடைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

No comments:

Post a Comment