Tuesday 26 February 2013

முள்ளிவாய்க்காலில் பஸ் மீது வெள்ளை பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்; இன்னுமொரு போர்குற்ற ஆதாரம்


முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலங்களின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள், வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளை இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் வீசியுள்ளது என ஆதாரப் புகைப்படங்களோடு அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

குறிப்பிட்ட இப் புகைப்படம் இதுவரை வெளியாகாத ஒரு புகைப்படம் ஆகும். இதில் பஸ் ஒன்றின் மீது மற்றும், மீன் பிடிப் படகு ஒன்றின் மீதும் பாஸ்பரஸ்(எரி குண்டு) வீசப்பட்ட அடையாளங்கள் காணப்படுகிறது.

 மரம் ஒன்றின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த பஸ்சின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வேளை, அதில் பொதுமக்கள் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுவதாக அவுஸ்திரேலிய ஊடகம் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்து, அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்ப அனுப்பவேண்டாம் என்றும் அது மேலும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 


இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சிலவேளை கொல்லப்படலாம், இல்லையேல் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment