Friday 22 February 2013

வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா!


 வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது.

இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய சட்டத்தின் படி, வெளிநாடுகளில் புகலிடம் கோரியோர், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமைபெற விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இரட்டைக் குடியுரிமைப பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்த புதிய விதிமுறையைக் கொண்டு வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment