Tuesday 19 February 2013

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான மாநாடு


இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான மாநாடு 2013 பெப்ரவரி 27-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்படவுள்ளது.

இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படம் பின்னர் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரின்போது முழுமையாகத் திரையிடப்படும்.

உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த மேற்படி மாநாட்டில் 2013 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளின் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து செயற்படும் பன்னாட்டு மன்னிப்பு சபையும் அமெரிக்காவிற் செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகமும் இந்த மாநாட்டில் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் தாம் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கைகளை வெளியிடவுள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க அமைத்த நிபுணர்குழுவின் முன்று உறுப்பினர்களில் ஒருவரான யஸ்மின் சூக்காவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இலங்கைத் தமிழர்களை ஏமாற்ற அனுப்பப்பட்ட மாயமானாகிய நேர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இதில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. இவர் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது குற்றங்களை மீண்டும் முன்வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைகுரியவர்களான இரா சம்பந்தனும். எஸ் சுமந்திரனும் இந்த மாநாட்டில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்வார்களா? சிங்கக் கொடியை அம்மனின் கொடி என்பார்களா? அல்லது இந்தியா சொல்லிக் கொடுத்ததைச் சொல்வார்களா?

பிரித்தானியாவின் பிரதிப் பிரதம மந்திரி நிக் கிளேக், எதிர்க் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட், எதிர்க் கடசியின் நிழல் வெளிநாட்டமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கு பெறவிருக்கின்றனர்.

No comments:

Post a Comment