Friday 15 February 2013

உண்ணாவிரதத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினர் அட்டகாசம்





வலி வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சிவில் உடையில் வந்த நான்கு நபர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் ஊடகவியலாளர் ஒருவருடைய கமராவும் அடித்து நொருக்கப்பட்டது.

இன்று மதியம் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது இவ் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பாதுகாப்புக் என நூற்றுக் கணக்காக சிறிலங்கா காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மக்கள் பிடித்து அங்கு கூடிநின்ற பொலிசாரிடன் ஒப்படைத்தனர் ஆனால் அவர்களை கைது செய்யவோ, அல்லது போராட்டத்தை குழப்பாமல் தடுக்கவோ சிறிலங்கா காவல் துறையினர் தயக்கம் கட்டியதாக அங்கிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் ஒரு சிலரை காவல் துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து துரத்திச் செல்வது போல நடித்து  பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்ததனர்.
ஒருசிலரை அருகில் தயாராக வைத்திருந்த இராணுவ வாகனங்களில் ஏற்றிச் சென்றதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உண்ணாவிரத போராட்டத்தை குழப்பிய நபர்களை விரட்டிய பொது மகன் ஒருவரை சிவில் உடையில் அங்கு நின்ற  நபர் ஒருவர் ' உன்னை நன்றாக எனக்குத் தெரியும் உன்னைப் போட்டுத்தள்ளாமல் விடமாட்டேன்' என உயிர் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளார்.

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்திலே இந்த சம்பவங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment