Friday 15 March 2013

ஒற்றை நுரையீரலில் உயிர் வாழும் புதிய போப் பிரான்சிஸ்?

 
புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒரேயொரு நுரையீரலில் தான் உயிர் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. 
 
போப் 16ம பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இதையடுத்து அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
அவர் இனிமேல் போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார். புதிய போப் ஆண்டவர் பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

பியூனஸ் ஏர்ஸில் பிறந்தவர் 
போப் பிரான்சிஸ் 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் பிறந்தார். அவர் 266வது போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3 மொழிகள் பேசும் போப் போப் பிரான்சிஸ் 
ஸ்பானிஷ், இத்தாலிய மொழி மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சரளமாகப் பேசுவார். அவரது இளம்பருவத்தில் நோய்தொற்று ஏற்பட்டு ஒரு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் ஒரேயொரு நுரையீரலில் உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

எம்.எஸ்.சி. வேதியியல் படித்த போப் 
ரயில்வே ஊழியரின் 5 பிள்ளைகளில் ஒருவரான பெர்கோக்லியோ எம்.எஸ்.சி. வேதியியல் படித்துள்ளார்.

எளிமையான மனிதர் 
பெர்கோக்லியோ ஒரு எளிமையான மனிதர். ஆடம்பரங்கள் இருந்தும் அவர் சிறிய வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும் பேருந்தில் செல்பவர்.
 
2005ம் ஆண்டிலேயே போப் ஆக வேண்டியது 
பெர்கோக்லியோ கடந்த 2005ம் ஆண்டிலேயே போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் 16ம் பெனடிக்டுடன் கடும் போட்டி நிலவியபோது தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பெர்கோக்லியோ கார்டினல்களை கேட்டுக் கொண்டார்.
 
சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை 
அர்ஜென்டினாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை என்று பெர்கோக்லியோ மீது குற்றச்சாட்டு உள்ளது.
 
புத்தகங்கள் எழுதியுள்ள பெர்கோக்லியோ 
தியானம் மற்றும் ஆன்மீகம் குறித்து பெர்கோக்லியோ பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
 

No comments:

Post a Comment