Tuesday 19 March 2013

நாடகம் பெரும் நாடகம் உச்சக் காட்சி நடக்கிறது - ஐ.மு.கூட்டணி மற்றும் மத்திய அரசிலிருந்து திமுக உடனடியாக விலகுவதாக கருணாநிதி அறிவிப்பு -


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் விலகல் கடிதத்தை இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி காரணம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தி.மு.கவின் ஐந்து அமைச்சர்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மம்தா பெனார்ஜி தலைமையிலான திரிணாமூல் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. திரிணாமூல் கட்சியில் 4 அமைச்சர்கள் இருந்தனர்.

No comments:

Post a Comment