Thursday 7 March 2013

இலங்கை மீது சர்வதேச விசாரணை: ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தாக்கல்!



இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தயாரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். 2006-ல் அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க இலங்கை அரசு சர்வதேச உதவியை நாடலாம். மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வாபஸ் பெறவேணடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment