Thursday 28 February 2013

நெதர்லாந்தில் தமிழர் வீடுகளில் கொள்ளை


நெதர்லாந்து நாட்டில் -பிறேடா.எற்றன் லூர் பகுதிகளில் உள்ள தமிழர் வீடுகளை இலக்கு வைத்து தமிழ் .மற்றும் அவர்கள் வழி நடத்த படும் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விதம் அருகருகில் உள்ள இரு தமிழர்களின் வீடுகளின் கதவுகள் உடைக்க பட்டு விலை மதிக்க தக்க பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளன.

இதில் ஒரு வீட்டில் நகைகள் .விலை மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிட பட்டுள்ளன என தெரிவிக்க படுகிறது.

ஆனால் மறு வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வித்தியாசமான திருட்டை
செய்துள்ளனர்

அதவாது அவருக்கு வந்த கடிதங்களையும் திருடி சென்றுள்ளனர்
அதேவேளை மறுநாளும் அவர்கள் வீட்டுக்குள் பின் யன்னல் வழியாக புகுந்து வீட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்

இந்த விடயம் தொடர்பாக காவல்துறையில் சென்று முறையிட பட்டுள்ளதுடன் இருவர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது

இவர்களின் வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தமிழர்கள் எனவே
குறித்த வீட்டு உரிமையாளர்கள் சந்தேகிக்கின்றனர்

கொள்ளையர் வீட்டு முன் கதவு வழியாக உடைத்து உள்ளே நுழைந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற விடயங்கள் தெரிவிக்க பட்டன

இந்த வீட்டுக்குள் இருந்த இதர விலை உயர்ந்த பொருட்களும் திருட பட்டுள்ளதுடன் குறித்த வீட்டினை தீ வைத்து கொளுத்தும் முயற்சியில் இந்த திருடர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது.

குறித்த விடயங்கள் யாவும் உரியவர்களிடம் முறையிடபட்டுள்ளது.

தொடர்ந்து சந்தேகிக்க படும் நபர்கள் கண்காணிக்க படுகின்றனர்
அத்துடன் பொலிசார அயலவர்களிடம் சென்று விசாரிதுள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் குறித்த திருடர்கள் மடக்கி பிடிக்க படுவார்கள் என ஏதிர்பார்க்க படுகின்றது அயலவர்களிடம் குறித்த வீட்டு உரிமையாளரை தவிர பிற நபர்கள் நடமாடினால் உடனடியாக பொலிசாருக்கோ அன்றி வீட்டு உரிமையாளருக்கோ தெரிவிக்கும் படி அறிவிறுத்த பட்டுள்ளனர்.

நியூயோர்கில் இருந்து சீனாவுக்கு இரண்டு மணி நேரத்தில் போகலாம்



 மாட்டுவண்டியில் இருந்து ராக்கட் வரை போக்குவரத்தில் முன்னேறிவிட்ட மனிதன் இனி மின்னலோடு போட்டியிட்டு பயணிக்கத் தயாராகிறான்..
பறவையை கண்டான் விமானம் படைத்தான்..

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்..

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் என்ற திரைப்படப் பாடலைப்பாடிய கவிஞர் இப்போதிருந்தால் மின்னலை கண்டான் ஈ.ரி-3 போக்குவரத்தைப் படைத்தான் என்று எழுதியிருப்பார்.

ஈ.ரி.-3 என்றால் என்ன..?

வெற்றிடமான ரியூப் மூலம் காற்றால் உவிந்திழுத்து பயணம் செய்யும் புதுவகைத் தொழில் நுட்பமாகும் (Evacauted tube transport technologies)
எப்படி..?

பிரதான வீதிகளுக்கு அருகாமையில் தரையில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் அகலமான தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் இந்தப் போக்குவரத்துக் குழாய்கள் பல நூறு கி.மீற்றர்களுக்கு தொடுத்துச் செல்லப்படும்.

மிகக் குறைந்த விலையில் அமைக்கப்படும் இந்த ரியூப்களுக்குள் கப்சல் என்ற பெயர் கொண்ட ஆறுபேர் இருக்கக் கூடிய 1.5 மீட்டர் விட்டமுடைய உல்லாசமான குடுவைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வரும்.


ஆறுபேர் இருக்கும் இதனுடைய நிறை 183 கிலோ, பயணிகளுடன் உச்ச நிறை 367 கிலோ. (இதை 1910 லேயே வரைந்தவர் அமெரிக்க பொறியியலாளர் றொபேட் கோட்றாட் என்று விக்கிபீடியா கூறுகிறது)

இவற்றை காற்றின் மூலம் உறிஞ்சி இழுக்கும்போது மணிக்கு 600 கி.மீ வேகத்தில் உரிய இடத்திற்கு போய்ச் சேரும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் இருந்து வோஷிங்டனுக்கு பறக்கும் நேரம் வெறும் அரைமணி மட்டுமே.

கனவேகத்தில் பயணிக்கும்போது உண்டாகும் வேகமான காற்று நுழைவு, தூசி போன்றவற்றால் இதற்குள் இருக்கும் பயணிகளுக்கு பாதிப்பு கிடையாது.
மக்னற்றிக் ட்றைவ் கப்சில் என்று குறியிட்டு அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து முறையை சீனாவுடன் இணைந்து அமெரிக்கரான ட்றயல் ஒய்ஸ்ரியஸ் என்பவர் அமைத்து வருகிறார்.

ஓட ஆரம்பித்த 17 செக்கன்களில் 600 கி.மீ வேகத்தில் ஓட ஆரம்பித்துவிடும், ஆனால் வருங்காலத்தில் இதை 6500 கி.மீ மணிக்கு என்ற வேகத்தில் ஓடும்படியாக விருத்தி செய்யலாம்.

நாம் வீட்டில் பாவிக்கும் காற்றில் தூசை இழுக்கும் இயந்திரம் குழாய்வழியாக குப்பையை உவிந்து பையில் போடுவதை நினைத்தால் இந்த வேலைத்திட்ட வடிவமைப்பின் தாற்பரியத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
பல்லாயிரம் கி.மீ நீளமான ரியூப் வழியாக பல நூறு குடுவைகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்க ஆரம்பிக்கும், இழுப்பது காற்று.


இதை உருவாக்கும் அமெரிக்கரான ட்றயல் ஒய்ஸ்ரியஸ் இதுபற்றிக் கூறும்போது, இது முற்று முழுதாக கணினி மூலம் இயங்கும் ஒரு போக்குவரத்து சேவையாக இருக்கும்.

சுமார் 32 தடங்கள் இருக்கும் பிரமாண்டமான சாலையில் போக்குவரத்து நடப்பது போல இதன் மூலம் எதிர்கால மனிதன் பயணத்தை செய்ய முடியும்.
இணையம் மூலம் டிக்கட்டுக்களை பதிவு செய்து வந்தால் குடுவைகள் நிலத்தடி ரயில்போல வரும் நீங்கள் ஏறி அமர வேண்டியதுதான்.
பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலமென பல்வேறு நிறங்களில் இவை உருவாக்கப்பட்டிருக்கும்.

இயற்கைக் காட்சிகளை பார்க்காது மேற்கொள்ளும் இந்தப் பயணத்திற்கு வர முதலில் மக்கள் தயங்குவார்கள் என்பதால் ஒவ்வொரு பயண வாகனத்திலும் தொலைக்காட்சி பெட்டிகள், கணினி விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இப்பயணத்தில் விபத்து வருவது மிகவும் குறைவாகவே இருக்கும், அப்படி வந்தால் இதன் கதவுகளை திறந்துவிடுவதற்கு விமானத்தின் கதவுகளை திறப்பது போன்ற விசேட பணிகள் நடைபெற்றால் போதுமானது.

முதற்கட்டமாக அமெரிக்காவின் பெரு நகரங்களுக்கிடையில் நடைபெறும் இந்தப் போக்குவரத்து படிப்படியாக விஸ்த்தரிக்கப்பட்டு உலகின் மற்றைய நாடுகளிலும் கால் பதிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் சமுத்திரங்களின் மேலாக அமைக்கப்படும் இந்தக் குழாய்கள் பிரிந்துகிடக்கும் கண்டங்களை எல்லாம் வலைப்பின்னலாக இணைத்துவிடும்.

கண்டங்களுக்கிடையில் பாலங்களை அமைப்பதைவிட இதற்கான செலவு மிகவும் குறைவானது, பாவிக்கப்படும் சக்தி கூட 80 வீதம் மீளப்பாவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

வருங்காலத்தில் நோர்வே ஒஸ்லோவில் இருந்து புறப்படும் ரியூப் வழி ஓடும் குடுவை வடிவிலான வாகனம் அவுஸ்திரேலியாவின் மெல்பேண் நகரை 18 மணித்தியாலத்தில் தொட்டுவிடும்.

எதிர்காலத்தில் நியூயோர்கில் இருந்து சீனாவுக்கு இரண்டு மணி நேரத்தில் போகலாம்..

விமானத்தைவிட அரைப்பங்கு நேரத்தில் இதன் பயணம் முடிந்துவிடும்.
இதில் நீங்களும் பயணிக்க வேண்டுமானால் ஒரேயொரு நிபந்தனை உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

இ. மகேசன் ( நோர்வே )

Wednesday 27 February 2013

இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகள்பயணம் தடுத்து நிறுத்தம் -நீதி மன்றம் அதிரடி நகர்வு


பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சம் நிராகரிக்க பட்டு சிறப்பு விமானம் மூலம் நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகளின் பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.

சட்ட தரணி களின் அதிரடி நடவடிக்கையினாலேயே இந்த பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது .

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட நாட்டின் வழிகாட்டல் வழக்கு முடியும் வரை தமிழ்அகதிகளை நாடு கடத்த கூடாது என மேல்முறையீட்டு நீதி மன்றம்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது .

இதுவரைகாலமும் மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குகள் பதியாமல் இருக்கும் தமிழ் அகதிகளை உடனடியாக அவர்களது பெயர் விபரங்களை நீதி மன்ற முகாமையாளருக்கு தாங்கள் தமிழ் அகதிகள் என்பதை அறிவிக்குமாறு கேட்டுகொள் படுகின்றனர்

Sri Lanka: London high court blocks Tamil deportations

 
The high court in London blocks the deportation of a group of failed Tamil asylum seekers who were due to be sent back to Sri Lanka on Thursday despite torture concerns. 

The high court decision was described as "unprecedented and precedent-setting" by a legal source.
The group of failed Tamil asylum seekers was due to be sent back to Sri Lanka on Thursday, on a flight leaving the UK at around 4pm, but now they will be able to remain in the UK while their situations are considered further.

The landmark decision has wider implications because it also applies to all other failed Tamil asylum seekers, and those in detention, meaning none can be removed at present. New claimants will still have to make claims in the normal way.

The failed Tamil asylum seekers, represented by Renaissance Chambers, were due to be deported on Thursday despite the government's admission earlier this month that at least 15 Tamils previously sent back to Sri Lanka were tortured.

Sri Lanka has an alarmingly persistent record of serious human rights abuse, particularly for those who oppose the regime of President Mahinda Rajapaksa. Most of the victims are ethnic Tamils.

In 2009, a 27-year-long Tamil insurgency was crushed by the Sri Lankan government, at the loss of tens of thousands of civilian lives. Although the war is over, human rights groups say many Tamils continue to live in fear.
A UK Border Agency spokesman told Channel 4 News: "We are disappointed with the outcome of this hearing and we will appeal. The ruling does not represent a blanket ban on returns to Sri Lanka."

A question of timing

The judge, Mr Justice Wilkie, described the situation as "virtually unique", due to the timing of the case.
At the same time as this particular case was under consideration, an immigration tribunal has been hearing evidence on the wider question of the situation in Sri Lanka. Its deliberations will be used to update Home Office guidance on the risks of returning people to the country.

Mr Justice Wilkie said that because the guidance on Sri Lanka was being considered "virtually afresh" and it was clear that "the existing country guidance will have to change", the failed Tamil asylum seekers could not be deported as planned.

"That position is one which this court cannot simply blind itself to," he said.

Keith Best, chief executive of Freedom from Torture, told Channel 4 News: "In the face of such overwhelming evidence, it is a sad indictment of our political masters that it has taken a court to impose the precautions that we have repeatedly called for.

"The UKBA's removals policy for Sri Lankan Tamils remains deeply flawed. Until this is remedied many in need of the UK's protection still live with the risk of forced return to torture."

Sri Lankan High Commission statement on allegations of torture of Tamils
"We regret that once again, Channel 4 has asked us to comment pre-facto, even before its programme is aired, and without being told precise details of what is due to be broadcast. Going by your past record it is highly likely to be another spurious piece of theatre. 

"In addition, the timing of your release appears to be a continuation of your sinister campaign to attempt to discredit Sri Lanka."


சர்வதேச விசாரணையை வலியுறுத்திய உலகத்தமிழர் பேரவை


உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள்.

விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்திரம் போன்றவற்றை மதிக்கிறார்கள் என்றார். இந்த விடயங்களை தாம் இலங்கையிடமும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாகப் பேசிய மற்றுமொரு லிபரல் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான, எட் டேவி, போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதுவரை அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகச் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்று தான் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும் அவர் பேசுகையில், ”இந்தப் பிரச்சினையில் பிரிட்டன் மட்டும் இலங்கை மீது பெரிய அழுத்தத்தை தந்துவிட முடியாது. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படவேண்டிய நிலையில் இருக்கிறது. அப்போதுதான் இலங்கையை ஒரு அரசியல் ரீதியான தீர்வைத் தர வலியுறுத்த முடியும்” என்றார்.

கூட்டத்தில் பேசிய பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சியின் தலைவருமான, எட் மிலிபாண்டும், இலங்கை குறித்து பிரிட்டனில் உருவாகிவரும் அரசியல் கருத்தொற்றுமையை சுட்டிக்காட்டினார்.
”இன்றைய நிகழ்ச்சியில் துணைப்பிரதமர் மற்றும் பிற பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒரு செய்தியைச் சொல்லுகிறது. இலங்கை குறித்து, பிரிட்டனில் நடந்து வரும் விவாதம் எப்படி மாறி வருகிறது என்பதைப் பற்றியது அது. இந்த விவாதம் இலங்கையில் நடந்தவற்றுக்கு நடவடிக்கை வேண்டும் என்று ஒரு அனைத்துக்கட்சி கருத்தொற்றுமை உருவாகிவருவதை அது சுட்டிக்காட்டுகிறது” என்றார் எட் மிலிபாண்ட்.

முன்னதாக நிகழ்வில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்த யாஸ்மின் ஸுக்கா, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்காட், ஷிபான் மக்டொனா, கீத் வாஸ், போன்றோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன் போன்றோரும் பேசினர்.

இந்த நிகழ்வில், சானல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கேலம் மக்ரே தயாரித்த ”நோ பயர் ஸோன்” என்ற ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டன.

லண்டனிலிருந்து நாளை நாடு கடத்தவுள்ள இலங்கை அகதிகளின் விமானத்தை நிறுத்தும் முயற்சியில் சனல் 4


பிரித்தானியாவில் புகலிடம் கோரிய 65 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..

நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை அனுப்பாமல் இருக்க வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இவர்கள் மீள் இலங்கை செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் சனல் 4 களம் இறங்கியுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

தாம் வெளியிட்ட இலங்கையின் குற்றங்கள் மனித உரிமைகள், பாலியல் குற்றங்கள் என்பனவற்றை அவை ஆதாரமாக வைத்துள்ளதாக தெரியவருகிறது.

Tuesday 26 February 2013

சிங்களத்துக்கு எதிராக மலேசியாவில் கொதித்து எழுந்த தமிழன்

 
இன்று மலேசியா தலை நகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல் துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்லவேண்டும் என்றுஇட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல் துறையின் அராஜகத்தால் இரு தரப்பினருக்கும் கை கலப்பு ஏற்பட்டது.

 அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட 3பேரை கைது செய்ததால் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது 100 மேற்பட்ட காவல்துறையினர் இருந்த போதும் தமிழர் உதவும் கரங்கள் தலைவர் முரளி இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட முயன்ற போது காவல் துறையினர் தாக்க முற்பட்டதால் மக்கள் இலங்கைத் தூதரகத்தை தாக்கினார்கள்.

இதனால் இலங்கை துதரக முன் வாசல் கதவு உடைக்கப்பட்டது கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் அடைந்த காவல்துறையினர் மூவரையும் விடுதலை செய்தார்கள் இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியை பயத்தில் அகற்றி விட்டார்கள்

சிங்களவர்களை பட்டினி போட்டு திருப்பி அனுப்பிய ஹோட்டல் ஊழியர்கள்

விடுதலை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்ப‌ி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌னி‌ன் மக‌ன் இல‌ங்கை ராணுவ‌த்‌தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வை பா‌ர்‌த்து கடு‌ம் கொ‌தி‌ப்‌பி‌ல் இரு‌க்கு‌ம் த‌மி‌ழ்நா‌ட்டு ம‌க்க‌ள், வேளாங்கண்ணிக்கு வந்த 75 சிங்கள‌ர்களு‌க்கு ஓ‌ட்ட‌லி‌ல் சா‌ப்பாடு மறு‌க்க‌ப்ப‌ட்டதோடு அவ‌ர்க‌ள் ‌விர‌ட்டியடி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கை ராணுவத்தினரால், அப்பாவி தமிழர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படும் காட்சிகள் வெளியாகி வருவதால், தமிழ்நாட்டில் சிங்களர்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனை, பணய கைதியாக பிடித்து வைத்து அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம், தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் ஆன்மிக பயணமாக தமிழகம் வந்த அந்நாட்டு எம்.பி. கர்ணரத்தன ஜெயசூர்யாவை தமிழின ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நாகை, தஞ்சை, திருச்சியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இலங்கையில் இருந்து சிங்களர்கள் 75 பேர் தனியார் விமானம் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக பயணமாக திருச்சி விமானநிலையத்திற்கு வந்தனர். அவர்கள் 3ஆ‌ம் தேதி வரை வேளாங்கண்ணியில் தங்கி இருந்து விட்டு, சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்த தகவல் வெளியே தெரிந்ததால், தமிழீழ ஆதரவு அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என கருதி, அவர்களை போலீசார் பத்திரமாக திருச்சியில் இருந்து 2 பஸ்களில் வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்கள் வந்த தகவல் பரவியதால், இலங்கை பயணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரச்சனை ஏற்படாமல் இருக்க, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே இலங்கை பயணிகள் வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை வேளாங்கண்ணி செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் மீண்டும் திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல போலீசார் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சிங்களர்கள் வந்த 2 பஸ்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே வந்து கொண்டிருந்தன.

அங்கு சாலையோரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக அவர்கள் பஸ்களில் இருந்து இறங்கினர். அவர்கள் சிங்களர்கள் என்று தெரிந்து கொண்ட ஓட்டல் ஊழியர்கள், அவர்களுக்கு சாப்பாடு போட மறுத்து, திரும்பிப்போகும்படி கூறினர். அப்போது ஓட்டல் ஊழியர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ஓட்டல் ஊழியர்களை சமாதானப்படுத்தி, இலங்கை பயணிகளை பஸ்சில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

பவர் ஸ்டாரின் முத்தத்ததால் கோபமடைந்த நடிகை!


அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். 
 
நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார்.
 
 நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளுடன் இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார் சீனிவாசன். 
 
ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சீனிவாசன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, உடன் ஆடிய அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார். பல் பட்டுவிட்டதோ என்னமோ.. அந்த நடிகை ஏக கோபத்துடன் சத்தமில்லாமல் திட்டிக் கொண்டே, இன்னொரு முறை இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தார். 
 
ஆனால் பவரோ இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். 
 
முதலில் உர்ரென்றிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி சீனிவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்!

தற்கொலைக்கு முயன்ற புலிகளின் மூத்த தளபதி வீமனின் தயார் மரணம்


 காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது.

18 ஆம் திகதி  அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிர் இழந்தார்.

இதனிடையே குறித்த முன்னாள் போராளிகளது குடும்பத்தவர்கள் மீது இலங்கை படையினர் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் முன்னெடுத்துவரும் சித்திரவதைகள் மற்றும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நிகழ்வுகளும் இத்தகைய தற்கொலைக்கு காரணமென நம்பப்படுகின்றது. இத்தகைய அச்சுறுத்தல்களாலேயே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் காரணமாகிவிடுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யுத்தகாலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கடந்த ஆண்டினில் இலங்கையின் தற்கொலைவீதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் பஸ் மீது வெள்ளை பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்; இன்னுமொரு போர்குற்ற ஆதாரம்


முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலங்களின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள், வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளை இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் வீசியுள்ளது என ஆதாரப் புகைப்படங்களோடு அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

குறிப்பிட்ட இப் புகைப்படம் இதுவரை வெளியாகாத ஒரு புகைப்படம் ஆகும். இதில் பஸ் ஒன்றின் மீது மற்றும், மீன் பிடிப் படகு ஒன்றின் மீதும் பாஸ்பரஸ்(எரி குண்டு) வீசப்பட்ட அடையாளங்கள் காணப்படுகிறது.

 மரம் ஒன்றின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த பஸ்சின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வேளை, அதில் பொதுமக்கள் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுவதாக அவுஸ்திரேலிய ஊடகம் மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்து, அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்ப அனுப்பவேண்டாம் என்றும் அது மேலும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 


இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சிலவேளை கொல்லப்படலாம், இல்லையேல் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

2012 இல் அரசின் தடுப்புக் காவலில் என்னை கற்பழித்தனர்; லண்டன் தப்பி வந்த பெண் வாக்குமூலம்

மனித உரிமைக் கண்காணிப்பகம் 141 பக்க அறிக்கை ஒன்றை இன்றைய தினம்(26) வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.

சில மணி நேரம் கழித்து தான் மயக்கத்தில் இருந்து எழுந்தவேளை, தாம் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். பின்னர் தன்னிடம் வந்த 2 சிங்கள அதிகாரிகள் தன்னை பாலியரீதியாக துன்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரவு வந்த மேலும் 2 அதிகாரிகள் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கண்ணிர் மல்கத் தெரிவித்துள்ளார். இவரது கூற்று காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் ஒருவர், நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கை அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

Monday 25 February 2013

கமெரூனில் கடத்தப்பட்ட பிரான்ஸ் பிரஜைகள் 7 பேரும் கழுத்தறுப்புக்கு காத்திருப்பு

 பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கமேரூன் என்ற நாட்டில் வைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது அனைவரும் அறிந்தது பிரான்ஸ் மக்களிடையே ஒரு பதட்டத்தையும் உண்டு பண்ணி இருந்தது.

 அந்த வகையில் அவர்களை எங்கு வைத்து இருக்கின்றார்கள் என்று தெரியாமல் பிரான்ஸ் அரசாங்கம் திணறிய நிலையில் இன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட அந்த குடும்பத்தினர் அவர்களோடு நான்கு குழந்தைகள் உட்பட காணொளியை விட்டு உள்ளனர்.

தங்களது தீவரவாத அமைப்ப சேர்ந்த சிலரை விடுதலை செய்ய வேண்டும் என்று அத்தோடு மாலியில் இருந்து பிரான்ஸ் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் இந்த இரண்டும் நடக்காவிடில் இவர்கள் கழுத்தை அறுத்து கொன்று உங்களுக்கு காணொளியை அனுப்ப வேண்டி வரும். அத்தோடு தாக்குதல்களை பிரான்ஸ் நாட்டு பிரஜைகளுக்கு எதிராக கொடூரமாக நடத்துவோம் என்று கூறி காணொளியை விட்டு உள்ளனர்.

பள்ளிப்பேருந்தை காப்பாற்ற நிர்வாணமாக போஸ்


குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.
ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது.

இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை.

இதையடுத்து தாய்மார்கள் சிலர் கூடிப் பேசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 10 பெண்மணிகள் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காலண்டர் தயாரிப்பது என்றும் அதை விற்று அதில் வரும் காசை பள்ளி நிர்வாகத்தின் பேருந்து சேவைக்குத் தருவது என்றும் முடிவெடுத்தனர்.
இதையடுத்து 10 பேரும் விதம் விதமாக போஸ் கொடுத்தனர். சிலர் டாப்லெஸ்ஸாவும், சிலர் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்தனர். இந்த காலண்டரை விற்பனைக்கும் விட்டனர்.

அதில் அவர்களுக்கு நல்லவரவேற்பும், வருமானமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர்களிடம் வருகிற யூன் மாதம் வரைக்கும் பேருந்தை இயக்குவதற்குத் தேவையான நிதி கிடைத்து விட்டதாம்.
இதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இதேபோல நிர்வாண காலண்டர் போட்டு நிதி சேகரித்து தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க திட்டமிட்டுள்ளனராம்.

அண்ணனைப் போல தம்பியும் எல்லாம் பப்ளிக்கில்


பிரித்தானியாவில் இளவரசர் வில்லியமை போலவே அவரது தம்பி ஹாரியும் தனது காதல் விவகாரத்தில் பகிரங்கமாகவே நடந்து கொள்கிறார்.
இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் மகன்கள் வில்லியம், ஹாரி ஆவர். கேத் மிடில்டனை காதலித்த வில்லியம் அதை பகிரங்கமாக அறிவித்த பின், காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவரை போலவே தம்பி ஹாரியும் (வயது 28) இப்போது கிரசிடா போனாஸ் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.

லீட்ஸ் பல்கலையில் பட்டம் பெற்ற கிரசிடா, நடனம் கற்று வருகிறார். இந்நிலையில் காதலி கிரசிடாவின் உறவினர் பெண்ணுக்கு தென் ஆப்ரிக்காவில் திருமணம் நடக்க உள்ளது. அதில் ஹாரியும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அப்போது கிரசிடாவின் பெற்றோரை ஹாரி சந்திக்க உள்ளார்.

இது தொடர்பில் அவர், நான் தனியாகத்தான் இருக்கிறேன். நான் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற அந்தஸ்து இருப்பதால், காதலி கிடைப்பது கஷ்டமாக உள்ளது என்றார்.


ஆனால், இப்போது கிரசிடாவை காதலிப்பது உறுதியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரித்தானியா படையில் ஹெலிகொப்டர் ஓட்டுநராக பணியாற்றிய ஹாரி, சமீபத்தில்தான் நாடு திரும்பினார். அதன்பின் சுவிட்சர்லாந்தில் தனது மாமா ஆண்ட்ரூவின் 53வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.

அங்கிருந்த கிரசிடா, நேராக ஹாரியிடம் சென்று அவரது மடியில் உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

விழா முடிந்ததும் இருவரும் கிளப்புக்கு சென்று வோட்கா அருந்தியதனால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது கிரசிடாவுடனான காதல் உறுதியானதால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“யாருங்க போட்டோவில? உங்க சித்தப்பாவா?”; பவர் ஸ்டாரை கிண்டலடித்த லட்சுமிராய்


‘ஒன்பதுல குரு’ விவகாரத்தில் கடும் அப்செட்டில் உள்ள பவர் ஸ்டார், ஏற்கனவே எடுக்கப்பட்ட பாடல் காட்சியை ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று பிரஷர் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நடிகை லட்சுமிராய் குத்தாட்டம் ஆட மறுத்ததால் ஏற்பட்டுள்ள விவகாரம் இது.

நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் முதல்முறையாக டைரக்ட் செய்து வரும் படம் தான் ‘ஒன்பதுல குரு’. இந்தப் படத்தில் ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கிறார்.

முன்பெல்லாம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட, பிரபல நடிகை ஒருவருக்கு இதிக பணம் கொடுத்து கூட்டிவருவார்கள். இப்போது, பவருக்கு பவர் உள்ளதால், பவர் ஸ்டாரை அணுகி திட்டத்தை சொல்லியிருந்தார்கள்.

“ஒரு பாட்டுக்கு டான்ஸா? நம்ம 3 கோடி ரசிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்களே…” என்று பவர் ஸ்டார் இழுத்தபோது, டைரக்டர் போட்ட ‘பிட்டு’ தான்.., “நீங்க ஹீரோயின் லட்சுமிராயுடன் அல்லவா டான்ஸ் ஆடறிங்க”
இதையடுத்து, குஷி மூடில் உடனே ஓ.கே சொல்லிவிட்டார் பவர்.

அடுத்த ஆபரேஷன்தான் சிக்கலானது. லட்சுமிராயை சம்மதிக்க வேண்டுமே.
டைரக்டர் தயங்கி தயங்கி லட்சுமிராயை அணுகி, பவர் ஸ்டாரின் போட்டோவை எடுத்து நீட்டியிருக்கிறார்.

நடிகையும் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு, “யாருங்க போட்டோவில? உங்க சித்தப்பாவா?” என்று டைரக்டரை திருப்பி கேட்டிருக்கிறார்.

“இல்லிங்க. இவர்தான் பவர் ஸ்டார். இவர்கூட நீங்க டான்ஸ் ஆடணும்” என்று விண்ணப்பத்தை போட்டார் டைரக்டர்.

“பவர்… ஸ்டாரா..? ஏதாவது ஹைட்ரோ எலக்ட்ரோ பிளான்ட் ஓனரா? யாருன்னே தெரியாதவங்க கூடவெல்லாம் என்னால டான்ஸ் ஆட முடியாது.. சாரி” என்று கண்டிஷனாக மறுத்துவிட்டார் நடிகை.

இதனால் வேறு வழியின்றி பவர் ஸ்டாரை மற்ற துணை நடிகைகளுடன் சேர்ந்து ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்கியிருக்கி முடித்திருக்கிறார்கள்.

பவர் ஸ்டார் நல்ல மனுஷன். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைக்கிற மாதிரி, துணை நடிகைகளுடன் ஆடிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.
ஆனால், அவரது கைத்தடிகள் விட வேண்டுமே… செமையாக கீ கொடுத்து விட்டார்கள்.

“அண்ணே… தமிழ் சினிமாவில சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த ஸ்பாட்ல இருக்கிற நீங்க, துணை நடிகைகளுடன் ஆடினா, இமேஜ் என்னாகிறது?”

இதையடுத்தே, ஏற்கனவே எடுக்கப்பட்ட பாடல் காட்சியை, வேறு ஒரு நடிகையை புக் செய்து, பவருடன் ஆடவிட்டு ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று பிரஷர் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

ரீ-ஷூட் செய்வதற்கு புக் பண்ண வேண்டிய நடிகை யார்?
பவர் தரப்பில் இருந்து 3 நடிகைகளின் பெயர்கள் கொடுத்து, “இவர்களில் யாரையாவது புக் பண்ணுங்க…” என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

அந்த பெயர்களை நாங்கள் சொன்னால், சம்மந்தப்பட்ட நடிகைகள் மானநஷ்ட வழக்கு போட்டுவிடுவார்கள் என்பதால், விட்டுவிடுவோம்!

நாளைக்கே பவர் ஸ்டார் சீனிவாசன் ஹிந்திக்கு போய், ‘சீனி கான்’ என்ற பெயரில்  நடிக்கட்டும்… இவங்களே சான்ஸ் கேட்டு வருவாங்க. அப்ப பாத்துக்கலாம்.

தேசியத்தலைவரின் மகன் கொலை தொடர்பான நேர்காணலில் மூக்குடைபட்ட சுப்ரமணியசுவாமி

எங்கள் அப்பா

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!

என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!

எங்கள் என்பது...
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது...
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது...
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!

ஆம்...அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
'ஆண் தாய்'
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்...

நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பாதகங்கள்
பார்த்திருப்பாய்!

நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!

உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்...
இது
யார்க்
குற்றம்!

என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!

உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க

உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!

பதில்
சொலுங்கள்!....

-அறிவுமதி-


நன்றி: பாவலர் அறிவுமதி

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பு

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமைக்கு லண்டனில் இரண்டு நேரடி சாட்சிகள்



இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் இரண்டு கண்கண்ட சாட்சிகள் முன்வந்துள்ளதாக தெ இன்டிபென்டன்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சாட்சிகளாக செயற்பட முன்வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். எனினும் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இவர்கள் தமது பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர்.

முதலாமவர், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு மெய்காவலராக செயற்பட்டு வந்தார். இறுதிப்போரின் போது காயமடைந்த அவர், படையினரிடம் சரணடைந்த நிலையில் படையினரால் தமக்கு விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவல் தருபவராக பயன்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், தாம் எதிர்ப்பார்க்காத வகையில் நன்கு ஒழுங்கமைப்பட்ட வகையில், விடுதலைப்புலிகள், படையினரிடம் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பின்னர் சடலங்களாக கிடந்தமையை தாம் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆசிரியராக செயற்பட்ட ஒருவர், தாம் விடுதலைப் புலிகளின் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவதை கண்டதாகவும் பெருமளவான இராணுவத்தினர் முன்னிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைந்தவர்கள், கொல்லப்பட்ட நிலையில், சுமார் 40 விடுதலைப்புலிகளின் குழு ஒன்று படையினரிடம் சரணடைய பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள குறித்த ஆசிரியர், அவர்கள் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Sunday 24 February 2013

www.media.gov.lk என்ற இலங்கையின் ஊடகஇணையம் மீது ஊடறுப்பு தாக்குதல்


இலங்கை அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்நிலையில், இன்று இலங்கை அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஹக் பண்ணப்பட்ட இலங்கை ஊடக இணையப் பக்கமான www.media.gov.lk  இல்,
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து, நாங்கள் பாகிஸ்தானியர்கள். எங்களுக்கு நீதி வேண்டும். அனைவருக்கும் நீதி வேண்டும் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின் போர்குற்றங்கள் தொடர்பிலான விபரண காணொளித் தொகுப்பு ஒன்றினையும் இணைத்துள்ளது.

ஏற்கனவே சிறிலங்கா அரசின் 50க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீதான இவ்வகை ஊடறுப்புக்களினால் திகைத்துப்போயுள்ள சிங்கள அரசுக்கு இன்றைய இந்த ஊடறுப்பு அதிர்ச்சியனை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் பாலசந்திரன் மீதான சிங்கள இராணுவத்தினரது படுகொலைக் காட்சிப்பதிவுகள் இலங்கையின் போர்குற்றங்கள் சாட்சிப்பதிவுகளாக சர்வதேசத்தின் கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளான இணையப் பக்கத்தில் போர்குற்றங்கள் தொட்பிலான காணொளிகள் வெளிவந்துள்ளமை சிங்கள அரசை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தபுரத்தில் கண்டெடுக்கப் பட்ட ஸ்ரீலங்கா ராணுவத்தின் தடை செய்யப் பட்ட எறிகணை



ஆனந்தபுரத்தில் அண்மையில் சில ஈழப் பத்திரிகையாளர்களால் கண்டெடுக்கப் பட்ட ஸ்ரீலங்கா ராணுவத்தின் தடை செய்யப் பட்ட எறிகணைகளின் சில வெடிக்காத பகுதிகளையும்,பொதுமக்கள் சிலரின் உடல்களை ராணுவம் எரியூட்டியபின் எஞ்சியிருக்கும் சில எலும்புத்துண்டுகளையும் இங்கே காணலாம்.இவைகள் பற்றிய சில ஆவணங்கள் சில ஊடகவியலாளர்களால் ஐ.நா.மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்துச் செல்லப் படவிருக்கின்றன..என்பது குறிப்பிடத் தக்கது.

Friday 22 February 2013

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா அரசின் 3 பாலியல் துன்புறுத்தல்கள்


சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. 

சாட்சியம் 01

2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண்,
“கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன்.
எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை.
அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர்.
எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.
எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தை கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர்.
எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்கு கூறினேன்.
அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.
பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின்போது, வெண்சுருட்டினால் சுடப்பட்டேன்.
மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர்.
ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன்.
சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்குள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.
அவர்கள் சிங்களத்தில் பேசினர். வேறு எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அது இருளாக இருந்ததால், அவர்களின் முகங்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.” என்று விவரிக்கிறார்.


சாட்சியம் 02
2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞர். “அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர்.
 நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன்.
அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர்.என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர்.
மின் வயரினால் அடித்தனர். வெண்சுருட்டினால் சுட்டனர். பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பைக்குள் அமுக்கினர்.
பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் ரீதியாதத் துன்புறுத்தப்பட்டேன்.
முதல் நாள் இரவு ஒருவர் தனியாக வந்து வல்லுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் இரண்டு ஆண்கள் எனது அறைக்கு வந்தனர்.
அவர்கள் என்னை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுடன் வாய் வழி உறவு வைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்தித்தனர்.
பாலியல் வல்லுறவுகளை அடுத்து எனக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறும் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.”

 
சாட்சியம் 03
2009 மே மாதம் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றொரு இளைஞர்.
“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார்.
எனது ஆணுறுப்பினுள் அவர்கள் சிறிய உலோகக் குண்டுகளை செலுத்தினர்.
சிறிலங்காவில் இருந்து நான் தப்பி வந்த பின்னர் அவை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.”
இதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கையும் உள்ளது. என்று விவரிக்கிறார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளே இவை.
இதுபோன்ற சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பலரும் தமக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு சாட்சியமளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலை யாகவில்லை.
அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு: பிரதமர் உறுதி

 
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் எம்பி.,க்களிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார். 
 
நேற்று மாலை ஹைதராபாத்தில் குண்டுவெடித்ததால் நாடே பரபரப்பாக உள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். இந்த பரபரப்பான சூழலில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினர். 
 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிட்டப்பட்டதற்கு பிரதமரிடம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 
 
மேலும் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பிரதமர் உறுதி இதனையடுத்து இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.
 
பிரதமர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

கருணாவின் ஆலோசனைக்கமையவே பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமால் குணரத்னவின் பற்றாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாகவும்,
2009ம் ஆண்டு மே 19ம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது, இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாகவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இதன்போது லெப்டினன் கேணல் அலுவிகார அவரது 681வது பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமால் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.

கமால் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமால் குணரத்ன, அவர்களிடம் தனிப்பட்ட விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளான்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் இராணுவத்தினரிடம் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர், பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு அறிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்‌ச மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பிரித்தானியாவின் ''சனல் 4'' தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

ஏனையவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் என்னால் பொறுப்பு நிற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக மேலும் அவ் இணையம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பிணங்கள் மிதந்த தண்ணீரைக் குடித்து உயிர் தப்பினோம்! இறுதிப் போரில் தப்பிய பெண்மணி வாக்குமூலம்



இலங்கையில் இறுதிக்கட்ட போரில் நடந்த கொடுமைகள் குறித்த சேனல்-4 புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘நோ பயர் சோன்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணபடம் 90 நிமிடம் ஓடுகிறது.
இலங்கை இறுதிகட்ட போரின்போது ‘நோ பயர் சோன்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக்குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங்களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

சேனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்படத்தில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆவண படத்தில் இலங்கை தமிழ்ப்பெண் வாணி விஜி,
’’இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நானும் ஏராளமான அப்பாவி தமிழர்களும் இடம்பெயர்ந்து உயிர் தப்பிக்க பாலத்தின் வழியாக கடந்து சென்றோம். அப்போது ஒரு மூதாட்டி இலங்கை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியை பார்த்து சிரித்த அதிகாரி, ‘பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரை குடி’ என்று ஏளனமாக கூறினார்.

பாலத்தின் அடியில் நான் பார்த்தபோது போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்கள் மிதந்தன. வேறு வழியின்றி பிணங்களை ஒதுக்கித்தள்ளி விட்டு அந்த தண்ணீரை எடுத்து குடித்தோம்’’ என்று கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட போரில் ஐ.நா. ஊழியர் பீட்டர் மெக்கே உயிர் தப்பினார். அவர் ‘சேனல் 4′ பேட்டியில்,

’’அது ஒரு மாலை நேரம். 4 மணி இருக்கும். கடுமையான வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நானும், ஏராளமான மக்களும் உயிர் தப்பித்தோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளுக்கிடையில் ஒளிந்திருந்தோம். எங்கள் மீதும் எல்லா திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கண் விழித்து பார்த்தபோது என் மீது ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அவரது உடலை வெடிகுண்டு துகள்கள் கிழித்திருந்தன. அந்த பெண் உயிருக்கு போராடினார். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மறுநாள் காலையில் அந்த இடம் பேரழிவு தளமாக காட்சியளித்தது.

எங்கு பார்த்தாலும் பிணங்கள். அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக ராணுவம் அறிவித்தது. அங்கு தஞ்சம் புகுந்த மக்களை ராணுவம் ஏன் குண்டு வீசி கொல்ல வேண்டும்.

பொதுமக்கள் சாவதை ராணுவம் பொருட்படுத்தவில்லை. திட்டமிட்டே அப்பாவிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த இடத்தில் 5 பேர் இறந்து கிடந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் பிணமாக கிடந்தான்.
அந்த சிறுவன்தான் பிரபாகரன் மகன் பாலசந்திரன். பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரன் இறந்து கிடந்தான். அவன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவன் 2 அடி நெருக்கத்தில் சுடப்பட்டு இருக்கிறான். இது கொலைதான். சிறிதளவும் அதில் சந்தேகம் இல்லை. இது ஒரு போர்க்குற்றம். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா!


 வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது.

இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய சட்டத்தின் படி, வெளிநாடுகளில் புகலிடம் கோரியோர், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமைபெற விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இரட்டைக் குடியுரிமைப பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்த புதிய விதிமுறையைக் கொண்டு வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகில் அம்மா பயணித்ததாக பாலச்சந்திரன் கூறினாரா?


 விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலைசெய்த நபர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவே என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மே 19ம் திகதி காலை 7.30 மணியளவில் 53ம் படைப் பிரிவில் வந்து சரணடைந்துள்ளார் பாலச்சந்திரன். இது இவ்வாறு இருக்கையில், 18ம் திகதி இரவு(முதல் நாள்) 2 படகுகள் நந்திக்கடலூடாக புறப்பட்டதாகவும், இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பவே இப் படகில், சிலர் பயணித்ததாக பாலச்சந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிடம் தெரிவித்ததாக அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. 

ஒரு படகில் தனது அம்மா மதிவதனி, புறப்பட்டுச் சென்றதாகவும், இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இக் கூற்றில் உண்மை இருக்கலாம். ஏன் எனில் கேணல் ரமேஷ் அவர்கள் 18ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தபோது அவரை முதலில் விசாரித்த இராணுவத்தினர், தேசிய தலைவரின் மகன் மற்றும் மனைவி எங்கே என்று தான் கேட்கிறார்கள். மற்றும் இதற்கு அடுத்த நாள் தான் பாலச்சந்திரன் இராணுவத்திடம் சரணடைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

Thursday 21 February 2013

மகனைப் போன்று தேசிய தலைவரும் மிக அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்


 இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்தது. அப்போது சுமார் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ஈவுஇரக்கமின்றி இலங்கை ராணுவத்தினரால் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

எனவே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் விரைவில் கூட இருக்கின்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவம் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதை இங்கிலாந்தை சேர்ந்த “சேனல்-4” டி.வி. சமீபத்தில் அம்பலப்படுத்தியது. பால்வடியும் முகத்துடன் கூடிய பச்சிளம் பாலகனான பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுவது போன்றும், உடலில் 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது. ஆனால் போர் நடந்தபோது பாலசந்திரன் கொல்லப்பட்டான் என இலங்கை ராணுவம் தெரிவித்து வந்தது.

தற்போது அவனை ராணுவம் பிடித்து சென்று ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் உலக மக்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விடு தலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் போரில் சாகவில்லை. அவரையும் சிங்கள ராணுவம் பிடித்து சிறை வைத்து சித்ரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி மதியம் 1 மணிக்கு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிணம் கிடந்ததாகவும், அதை ராணுவம் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தது. பிரபாகரன் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் போட்டோவையும் வெளியிட்டது.

முன்னதாக இரவில் முல்லிவாய்க்கல் பகுதியில் தப்பி ஓட முயன்ற விடுதலைப்புலிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தது. அப்போது நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் சிலருடன் பிரபாகரனும் இறந்ததாகவும், மறுநாள் உடல் கண்டெடுக்கப் பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

பிரபாகரனின் உடல் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவரது உடலை சுற்றி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர். அவரது தலையில் “பேண்டேஜ்” (தலைகட்டு) போடப்பட்டிருந்தது. தலைப் பகுதியில் எலும்புகள் நொறுங்கி இருந்தன. அவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது மிக அருகில் இருந்து கனரக ஆயுதத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கண்கள் திறந்த நிலையில் இருந்தன. அதை வைத்து பார்க்கும் போது அவரை பிடித்து வந்த சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியில் கண்கள் திறந்தபடியே உயிர் பிரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அவரது பிணம் கிடந்த இடத்தில் அதாவது தலையின் அடிப்பாகத்தில் ஏராளமான ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அக்காட்சி போட்டோவில் தெரிகிறது. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட 20 நிமிடத்தில் உடலில் இருந்து ரத்தம் வெளிவராது. உறைந்து விடுவதால் அது நின்று விடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் முதல்நாள் இரவில் நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும, மறுநாள் தான் அவரது உடல் கண் டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் போட்டோவில் தலையின் அடியில் ரத்தம் வெளியாகி கொண்டிருப்பது தெரிகிறது. அதை வைத்து பார்க்கும்போது, நந்திக் கடல் பகுதியில் நடந்த போரில் பிரபாகரன் சாக வில்லை. அப்போது அவர் இறந்திருந்தால் ரத்தம் கடல் நீரில் கரைந்திருக்கும். பிரபாகரனை பிடித்து வந்து ராணுவ முகாமில் வைத்து சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் படம் பிடித்து டி.வி.யில் ஒளிபரப்பு செய்துள்ளனர் என்றும் நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

நன்றி: மாலைமலர் 

காதலி புறப்படுவதை தடுத்த காதலனுக்கு கைவிலங்கு


 காதலி தனது நாட்டுக்கு புறப்படுவதை விரும்பாமல் தந்திரமொன்றை செய்த காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காதலர் தினத்தை கொண்டாடிய காதலியோ தனது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் கல்கிஸை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் இலங்கையர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வருகைதந்தார். இந்த ஜோடி கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடியது.

இதன்பின்னர் குறித்த பெண் தனது நாட்டுக்கு திரும்புவதற்கு விமான நிலையத்திற்கு பயணமானார். தனது காதலியை பிரிய விரும்பாத இலங்கையரான காதலன் தனது பணத்தையும் பெறுமதியான பொருட்களையும் திருடிச்சென்றுக்கொண்டு தனது காதலி சென்றுவிட்டதாக கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது குறித்த பெண் எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது உண்மை வெளியானது. காதலியை வெளிநாடு செல்லவிடாமல் தடுப்பதற்காக காதலன் செய்த தந்திரமாகும் என்பதனை அறிந்துக்கொண்ட பொலிஸார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து. நீதவான் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனை வழங்கினார்.

மொரட்டுவை எகொட உயனவையைச்சேர்ந்த ரொமேஷ் பிரியங்கார என்பருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதல் கசந்து போனதையடுத்து காதலி நாடு திரும்பிவிட்டார்.

Wednesday 20 February 2013

உறைய வைக்கும் உண்மை; சனல் 4 வீடியோ முன்னோட்டம் தமிழில்

தெல்லிப்பளைக்கும் ஜெனீவாவுக்கும் அரசின் ஒரே பதில்



 தெல்லிப்பளை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையதளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன.

இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அந்த படங்கள் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் என அரசு கூறுகிறது. இதேவேளை நேற்று உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ள, புலிகளின் தலைவர் பிரபாகாரனின் மகன் என்று சொல்லப்படும் பாலகன் சம்பந்தப்பட்ட படங்களையும் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் என இதே அரசு கூறுகிறது.

ஒரே கதையை தெல்லிப்பளையிலும், ஜெனீவாவிலும் சொல்லி, உலகத்தின் முன்னால் சிரிப்பாய் சிரிக்கும் நிலைமையில், பொய் சொல்லக்கூட தெரியாமல் இந்த அரசு இன்று தலை குனிந்து நிற்கிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, அமைதி கலகம் விளைவிப்பவர்கள் பயங்கரவாதிகள் ஆகும். கலககாரர்களை பிடித்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

இன்று இப்படி எதுவும் இல்லை என்று அரசு கோருகிறது. போலீஸ் பேச்சாளரும் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் நான் என் சொந்த கண்களால் கண்டதை, இவர்கள் இங்கே கொழும்பில் இருந்துகொண்டு இல்லை என்கிறார்கள்.

அரசாங்கம் இவர்களை காப்பாற்ற விளைகிறது என்பது உண்மை. இதனால் இந்த பயங்கரவாதிகளை, நான் அரச பயங்கரவாதிகள் என்று பகிரங்கமாக கூறுகிறேன். யாழ்ப்பணத்தில் போலீசாருக்கு வேலை இல்லை. பித்தளை பட்டன்களுடன் சீருடை அணிந்து, தொப்பி போட்டு சும்மா கைகட்டி நிற்கிறார்கள்.

அங்கு அனைத்து அரசியல், நிர்வாக, பாதுகாப்பு அதிகாரங்களையும், இராணுவ கட்டளை அதிகாரி ஹத்துருசிங்க தன் கையில் வைத்திருக்கிறார். போலீஸ் சும்மா வேடிக்கை பார்க்க மட்டும் முடியும். எனவே இவர்கள் இலங்கை போலீஸ் இல்லை. இவர்கள் சும்மா சிரிப்பு போலீஸ்.

இராணுவ புலனாய்வுதுறை இருக்கட்டும். அவர்கள் வந்து கூட்டங்களில், என்ன, யார் பேசினார்கள் என்பதயும் கூட்டங்களுக்கு வந்த மக்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து தங்கள் எஜமான்களுக்கு சொல்லட்டும். அது அவர்கள் வேலை. எனக்கு அதுபற்றி கவலை இல்லை.

ஏனென்றால் நான் எந்த ஒரு சட்டவிரோத வேலையையும் செய்வது இல்லை. ஆனால், இவர்கள் கூட்டங்களை குழப்பும் வேலையை செய்ய முடியாது. அது அரசியல்வாதிகள் சொல்லி செய்விக்கும் வேலை. இது இராணுவ புலனாய்வுதுறையின் வேலை இல்லை. இதை செய்தால் நான் இப்படித்தான் அம்பலப்படுத்துவோம்.

யாழ்ப்பாணத்தில், வன்னியில் வாழும் அப்பாவி மக்களை மிரட்டுவதை போல் எங்களை மிரட்ட நினைக்க வேண்டாம். நாங்கள் பல கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி எதிர்ப்பு இயக்கம். எமது எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் தொடர்பில் விமர்சனம் செய்தவர்கள் இன்று வாய் பொத்தி, கை கட்டி நிற்கிறார்கள்.

நமது யாழ் விஜயம் உறங்கும் உண்மைகளை வெளியே கொண்டு வந்துவிட்டது. சம்பந்தனும், மனோ கணேசனும் சொல்லும்போது அது தமிழனின் பொய் என்று இவர்கள் கூறி வந்தார்கள். ஆனால், இன்று இந்நாட்டு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் வாயினால் உண்மை வெளி வந்துவிட்டது.

இந்த எங்கள் வெற்றி. வெகு வரிவில் தெற்குக்கு சென்று அங்கே சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் உண்மைகளையும், கிழக்குக்கு சென்று முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் உண்மைகளையும், நமது எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் வெளியே கொண்டு வரும். பலாலியில் தமிழ் மக்கள் இராணுவ முகாம்களை முற்றாக அகற்ற சொல்லவில்லை.

விமான நிலையம், விமானப்படை முகாம், துறைமுகம் ஆகியவையும் இருக்க, மக்களின் வளமான தோட்டம் செய்யும் நிலங்களை மக்களிடம் மீண்டும் கையளிக்க முடியும். கொழும்பில் செய்வதை போல் கடலை நிரப்பி விமான ஓடுதளம் அமைக்க முடியும்.

இன்று யுத்தம் இல்லை. புலிகளும் இல்லை. புலிகளின் எறிகணைகளும் இல்லை. ஆகவே அதி பாதுகாப்பு வலயங்களும் இல்லை. பின் ஏன் மக்களின் நிலங்களை இன்னமும் பிடித்து வைத்திருக்கிறீர்கள்? இதுதான் ஆக்கிரமிப்பு.

Tuesday 19 February 2013

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் தற்கொலைக்கு முயற்சி!


 காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது.

இன்று அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நித்திரையிலிருந்து எழுந்து அவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும் இன்று காலையே அவர் மீட்கப்பட்டிருந்தார். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவுண்டு அபாயகரமான நிலையிலேயே அவர் இருந்துவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த முன்னாள் போராளிகளது குடும்பத்தவர்கள் மீது இலங்கை படையினர் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் முன்னெடுத்துவரும் சித்திரவதைகள் மற்றும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நிகழ்வுகளும் இத்தகைய தற்கொலைக்கு காரணமென நம்பப்படுகின்றது. இத்தகைய அச்சுறுத்தல்களாலேயே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் காரணமாகிவிடுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யுத்தகாலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கடந்த ஆண்டினில் இலங்கையின் தற்கொலைவீதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான மாநாடு


இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான மாநாடு 2013 பெப்ரவரி 27-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்படவுள்ளது.

இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படம் பின்னர் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரின்போது முழுமையாகத் திரையிடப்படும்.

உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த மேற்படி மாநாட்டில் 2013 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளின் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து செயற்படும் பன்னாட்டு மன்னிப்பு சபையும் அமெரிக்காவிற் செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகமும் இந்த மாநாட்டில் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் தாம் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கைகளை வெளியிடவுள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க அமைத்த நிபுணர்குழுவின் முன்று உறுப்பினர்களில் ஒருவரான யஸ்மின் சூக்காவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இலங்கைத் தமிழர்களை ஏமாற்ற அனுப்பப்பட்ட மாயமானாகிய நேர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இதில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. இவர் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது குற்றங்களை மீண்டும் முன்வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைகுரியவர்களான இரா சம்பந்தனும். எஸ் சுமந்திரனும் இந்த மாநாட்டில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்வார்களா? சிங்கக் கொடியை அம்மனின் கொடி என்பார்களா? அல்லது இந்தியா சொல்லிக் கொடுத்ததைச் சொல்வார்களா?

பிரித்தானியாவின் பிரதிப் பிரதம மந்திரி நிக் கிளேக், எதிர்க் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட், எதிர்க் கடசியின் நிழல் வெளிநாட்டமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கு பெறவிருக்கின்றனர்.

அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கடந்த பல மாதங்களாக தொடர்ந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேரூக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த மிரட்டல் கடிதம் 2 அரச ஊடகவியலாளர்களுக்கும், 2 தனியார் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த 2 அரச ஊடகவியலாளர்களினது தொடர்புகளும் கடந்த மாதம் முதல் இல்லாத காரணத்தினால் ஏனைய 2 ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுத்துறையிராலும் தொடர்ந்தும் இரகசிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் சுதந்திர ஊடகவியலாளர் றொசேரியன் லெம்போட் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு கிடைக்கப்பெற்ற கொலை மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து எங்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் தற்போது மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் 2 அரச ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர்.

உள் நாட்டிலா அல்லது பாதுகாப்பு கருதி வெளிநாட்டிலா தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியாது. இவர்கள் தொடர்பில் புலனாய்வுத்துறையினர் என்னிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் என தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா சென்று கடலில் தத்தளித்த 26 இலங்கையர்கள் மீட்பு


சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் பாதிப்புக்குள்ளான 26 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இந்தோனேசிய கடலோர காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தோனேசியாவுக்குட்பட்ட 'திடத்" தீவில் 12 நாட்கள் இவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இந்தோனேசிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 17 ஆண்களும், 6 பெண்களும் 3 சிறார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற ஆட்கடத்தற்காரர்கள், படகு விபத்துக்குள்ளான நிலையில், பயணிகளை நிர்க்கதியாக விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Monday 18 February 2013

தேசிய தலைவரின் இளைய மகன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள்




தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மகனை சிங்களம் கைது செய்து படு கோரமாக கொன்ற காட்சிகளை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். இன்று சில படங்கள் வெளியாகியுள்ளது.

 அந்த சிறிய பன்னிரண்டு வயது பாலகனை கைது செய்து பல கொடூர சித்திரவதைக்கு பின்னரே கொன்று உள்ளனர் என்பதை இன்று கிடைத்த புகைப்படம் உறுதி செய்கின்றது. இந்த புகைப் படத்தை பார்க்கும் உங்களுக்கு தெரியும்.

Saturday 16 February 2013

முஸ்லிம்களின் புர்காவை இலங்கையில் தடை செய்ய வலியுறுத்து


முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாகவும்  இதனால் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்காவை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது.
இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னைச் சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொது பல சேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோழியாக முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி


வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார்.

27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
26.06.2012 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புனர்வாழ்வு பெற்று வருகிறார்.

ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தொடரும் ஊடக அடக்குமுறை; சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு


சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாரூக் சவுகத்தலி என்பவரின்  மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு இரவு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பரான் சவுகரலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சண்டேலீடர் பத்திரிகை கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஒரு புலனாய்வுச் செய்தி இதழ்.

புலனாய்வுச் செய்திகளை எழுதிவந்த சௌக்கத் அலி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்தவொரு படுகொலை தொடர்பிலும் நீதி விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் தொடர்ந்தும் இருந்த வண்ணம் உள்ளன.

தீபம் தொலைக்காட்சி நோர்வே புலிகளுக்கு விற்பனை


லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.  நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர்.

தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.

தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.

ஓன்று பாசிச புலிகள் என்ற வார்த்தையை அவர் இனிமேல் தீபம் தொலைக்காட்சியில் பாவிக்க முடியாது. பாவித்தால் பாவம் அவர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்.

இரண்டாவது விடயம் வருடாவருடம் ஆட்டதுவசம் செய்வது போல யாழ்ப்பாண முஸ்லீம்களை 24 மணிநேரத்தில் உடுத்த உடுப்போடு பாசிச புலிகள் வெளியேற்றிய ஆண்டு தினம் இன்று என ஆட்டதுவசம் செய்ய முடியாது. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அது தவறுதான். ஆனால் அனாஸ் போன்றவர்கள் யாழ். முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை பேசும் சமகாலத்தில் கிழக்கில் 40க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழர்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப்பட்ட சம்பங்களையும் நினைவு கூர்ந்து கண்டிப்பாராக இருந்தால் அவரை நடுநிலையாளராக ஏற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவது விடயம் இனிமேல் மகிந்த ராசபக்சவின் கைக்கூலிகளை அழைத்து அவர்களின் பிரசாரத்திற்கு களம் அமைத்து கொடுக்க முடியாது.
அண்மையில் கூட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழக்கள் இருவரை அழைத்து யாழ்ப்பாணத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. இராணுவம் தமிழ் மக்களுடன் அன்பாக நடந்து கொள்கிறது. இந்த தமிழ் கூட்டமைப்பினரும் வெளிநாட்டில் உள்ள பாசிச புலிகளும் தான் பொய்யான பிரசாரத்தை செய்கிறார்கள் என சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினர்கள் இருவர் அனாசிற்கு செவ்வி வழங்கியிருந்தனர். அப்படி பட்டவர்களை வைத்து இனிமேல் அனாஸால் பிரசாரம் செய்ய முடியாது. இப்படி பட்ட பல கூட்டாளிகளை இனிமேல் அனாஸ் மறந்து விட வேண்டியதுதான்.

அடுத்தது தீபம் தொலைக்காட்சி அடிக்கடி களம் அமைத்துக்கொடுக்கும் இரு பெண்கள், பாசிச புலிகள் பாசிச புலிகள் என்ற வாய்ப்பாட்டை தவிர வேறு எதுவும் தெரியாத லண்டனில் இருக்கும் அம்மணிகள் இருவர்.  (லண்டன் புரட்சி திலகங்கள் இராஜேஸ்வரி அக்கா, நிர்மலா அக்கா) அவர்களுக்கும் இனி லண்டனில் தொலைக்காட்சிகளில் களம் இல்லை.

எற்கனவே  ஊத்தைகளுக்கு தீபம் தொலைக்காட்சிதான் களம் அமைத்து கொடுத்து கொண்டிருந்தது. லண்டனிலிருந்து இயங்கும் மற்றொரு தொலைக்காட்சியான ஜி.ரி.வி இப்படி பட்ட ஊத்தைகளை வாசல்படிக்கே எடுப்பதில்லை. தீபம் தொலைக்காட்சிதான் அசிங்கமான ஊத்தைகளிற்கு களம் அமைத்து கொடுத்து கொண்டிருந்தது. அதற்கு பெரிதும் உதவி வந்தவர் அனஸ்தான். இனிமேல் அவர்களின் தொடர்பை எல்லாம் துண்டித்து கொள்ள வேண்டியதுதான்.

தீபம் தொலைக்காட்சி கொழும்பில் வைத்திருந்த அலுவலகத்தை மூடியுள்ளது. விடுதலைப்புலிகள் வாங்கியுள்ளதால் இனிமேல் வெளிப்படையாக அலுவலகத்தை வைத்து இயங்க முடியாது. மறைமுறைமாகத்தான் இயங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும் முழுக்க முழுக்க புலி எதிர்ப்பாளர்களே வேலை செய்தனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஆனாலும் தீபத்தை வாங்கியவர்களின் இன்னொரு முகமும் இருக்கிறது. லண்டனில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பதால் இது விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி என காட்ட முடியாது. இதனால் அனாஸ் போன்றவர்களை முன்னுக்கு வைத்துக்கொண்டு புலியின் பக்கமும் இல்லை, பூனையின் பக்கமும் இல்லை, நாங்கள் நடுநிலையாளர்கள் என்று பம்மாத்துக்காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நன்றி: தினக்கதிர்