Tuesday 19 February 2013

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் தற்கொலைக்கு முயற்சி!


 காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது.

இன்று அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நித்திரையிலிருந்து எழுந்து அவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும் இன்று காலையே அவர் மீட்கப்பட்டிருந்தார். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவுண்டு அபாயகரமான நிலையிலேயே அவர் இருந்துவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த முன்னாள் போராளிகளது குடும்பத்தவர்கள் மீது இலங்கை படையினர் மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் முன்னெடுத்துவரும் சித்திரவதைகள் மற்றும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் நிகழ்வுகளும் இத்தகைய தற்கொலைக்கு காரணமென நம்பப்படுகின்றது. இத்தகைய அச்சுறுத்தல்களாலேயே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் காரணமாகிவிடுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யுத்தகாலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கடந்த ஆண்டினில் இலங்கையின் தற்கொலைவீதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment