Thursday 14 February 2013

கொழும்பில் இனி கொத்து ரொட்டியா ? கொத்தாத ரொட்டியா ?

 இலங்கை, மேல்மாகாணத்தில் கொத்து ரொட்டி தயாரிக்கும்போது ஏற்படும் சத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மாகாண சுகாதர அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் சத்தமாக கொத்து ரொட்டி தயாரிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தகவல் தருகையில்,

பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அல்லது சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையிலான சத்தங்களை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொத்து ரொட்டி தயாரிக்கும் போது ஏற்படும் சத்தம் குறித்தும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கொத்துரொட்டியை தடை செய்தல் என்று இதற்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேல்மாகாணத்தை அழகு படுத்தி சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அநாவசியமாக ஏற்படுத்தப்படும் சத்தங்களையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment