Friday 8 February 2013

பிரித்தானிய தமிழர்களுக்கு பிடிக்கப் போகிறது குதிரைக் குணம்; பிரித்தானிய உணவுகளில் குதிரை இறைச்சி


பிரித்தானியாவில் உள்ள பல கடைகளில் காணப்படும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் பெயர் போன கம்பெனி என்ன என்று கேட்டால் அனைவரும் கூறுவார்கள் "பின்டஸ்" என்று. இந்த பின்டஸ் என்னும் பெயருடன் இயங்கிவரும் இக் கம்பெனி பல உணவுவகைகளை தாயாரித்து விற்றுவருகிறது.

ஐஸ் லான், ரெஸ்க்கோ, செயின்ஸ் பெரி, அஸ்டா மற்றும் பல பல் பொருள் அங்காடிகளில், இந்த பின்டஸ் கம்பெனி தனது உணவை விற்றுவருகிறது. இந்தக் கம்பெனி விற்கும் அசைவ உணவுகளில், குதிரை இறைச்சி கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய மக்கள் கதிகலங்கிப் போயுள்ளார்கள். இதுவே இன்றைய தினம் அதிரடிச் செய்தியாக உலாவருகிறது. தமிழ் மக்கள் பலர் இந்தக் கம்பெனியின் உணவு வகைகளை வாங்கிப் பாவித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவுக் கம்பெனியின் உணவுகளை இனி வாங்கவேண்டாம் ! இவற்றில் குதிரை இறைச்சி கலக்கப்பட்டுள்ளது.

குதிரை இறைச்சிதானே இதில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்துவிடவேண்டாம். குதிரை இளமையாக இருக்கும் காலங்களில் அதனை பந்தையத்தில் விடுகிறார்கள். அது வேகமாக ஓடுவதற்கு, பலவகையான ஊசிகளை அடிக்கிறார்கள். பின்னர் குதிரை வயது முதிர்ந்ததும் அதனை வெட்டி இறைச்சியாக்கி, பிற இறைச்சிகளோடு கலந்து விற்பனை செய்கிறார்கள்.

குதிரை நன்றாக ஓட, அதற்கு அடிக்கப்படும் ஊசியில், பல நச்சுப் பதார்த்தங்கள் உள்ளதாம். அவை மனித உடலுக்கு கேடுவிளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக குதிரை இறைச்சியை சாப்பிட்டால், மனிதர்களுக்கு இரத்த அழுத்தம் உடனடியாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே தமிழ் மக்களே , குறிப்பிட்ட இந்தக் கம்பெனியின் உணவு வகைகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது. பாரிய சூப்பர் மார்கெட்டுகள், பின்டஸ் தயாரிப்புகளை உடனடியாக தமது கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில சில்லறை வியாபாரிகள் இதனைச் செய்யமாட்டார்கள். அவர்கள் இப் பொருட்களை தொடர்ந்தும் விற்க்க வாய்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment