Tuesday 19 February 2013

அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கடந்த பல மாதங்களாக தொடர்ந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேரூக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த மிரட்டல் கடிதம் 2 அரச ஊடகவியலாளர்களுக்கும், 2 தனியார் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த 2 அரச ஊடகவியலாளர்களினது தொடர்புகளும் கடந்த மாதம் முதல் இல்லாத காரணத்தினால் ஏனைய 2 ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுத்துறையிராலும் தொடர்ந்தும் இரகசிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்டத்தின் சுதந்திர ஊடகவியலாளர் றொசேரியன் லெம்போட் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு கிடைக்கப்பெற்ற கொலை மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து எங்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் தற்போது மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் 2 அரச ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர்.

உள் நாட்டிலா அல்லது பாதுகாப்பு கருதி வெளிநாட்டிலா தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியாது. இவர்கள் தொடர்பில் புலனாய்வுத்துறையினர் என்னிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment